வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் வெளியாகியுள்ள தகவல்களிபடி, “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு செல்ல வேண்டும். சில பேர் சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்கையில், அங்கு ஆடு மேய்த்தல், ஒட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கானவே மத்திய அரசின் நிறுவனம் இருக்கிறது. அதன் மூலமாகவும் வேலைக்கு செல்லலாம்.
வேலை விசா வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு செல்வது நல்லது. தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கு இதுபோன்று சுற்றுலா விசாவை பெற்றுக் கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் ஏமாந்து விடுகிறார்கள்.
எப்போதும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக தலங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து வேலைக்கு செல்லக்கூடாது. இதற்கென்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பாக தொலைபேசி எண். இருக்கிறது அதில் சந்தேகங்களை கேட்டுக் கொண்டு வெளிநாடு செல்வது சிறப்பு” என்றுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM