வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (அக்.,4) இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கான அறிவிப்பு அக்.,2ம் தேதி துவங்கியது.
இதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின், பேரி ஷார்ப்லெஸ்-க்கும், டென்மார்க்கை சேர்ந்த மோர்டனுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக இவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement