வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள்; புலம்பெயர் தமிழர் நலவாரியத்தில் பதிவிடுவது கட்டாயம்

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் அனைவரும் “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில்” பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோர் கண்டிப்பாக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், இதனை பலர் மேற்கொள்வதில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் ஒவ்வொருவரும் அரசிடம் எவ்வாறு பதிவு செய்வது.? அதற்கான நடைமுறைகள் என்ன ?
வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று பல்வேறு சந்தர்ப்ப சூழலால் பிரச்சினைகளில் சிக்கி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு புறம் இருக்க, அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணியும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் சவாலாகவே உள்ளது. பணி நிமித்தமாக வெளிநாடு செல்வோர் கண்டிப்பாக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், இதனை பலர் மேற்கொள்ளாததால் அவர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
image
எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
* Emigration Act 1983ன் படி வெளிநாடு செல்வோர் கண்டிப்பாக அரசிடம் தங்களது முழுமையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
* மத்திய வெளியுறவு துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள POEs (Protector of Emigrants) அலுவலங்களில் தங்களது தகவல்களை சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த அலுவலகம் தலைநகர் சென்னையில் இயங்கி வருகிறது.
* POEs மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்து செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
* அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சென்றால் மட்டுமே அவர்களே ஒவ்வொருக்கும் முழு பொறுப்பு ஏற்று கொள்வர்.
*வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும் மத்திய அரசிற்கு 50 லட்சம் வரையிலான தொகையை டெபாசிட் செய்துள்ளது. தங்களது நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட நபர்களுக்கு சந்தர்ப்ப சூழலால் ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கி கொண்டால், இந்த டெபாசிட் தொகை மூலம் அவர்களை மீட்டெடுக்கும் பணியினை அரசு மேற்கொள்கிறது.
* OMCL ( Overseas Manpower corporation limited ) போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அரசு அறிவுறித்தியுள்ளது.
image
வெளிநாடுகளுக்கு செல்வோர் எதையெல்லாம் செய்ய கூடாதென்பதையும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அவை,
* சுற்றுலா விசா மூலம் கண்டிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பணிபுரிய கூடாது.
* ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், செய்தி தாள் விளம்பரங்களை நம்பி பதிவு செய்யாத நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்
* அரசின் அதிகாரப்பூர்வ அலுவலகங்கள், நிறுவனங்களில் பதிவு செய்யாமல் சென்றால், ஒருவரின் பணியிடம் நிறுவனங்களை தொடர்பு கொள்வது சிரமம் என்பதால் அதனை தவிர்க்க கூடாது.
image
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் அனைவரும் “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில்” பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்வோரின் முழுமையான தரவுகளை சேமித்து வைத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் விரைவில் நல வாரியம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழ்நாடு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
செய்தியாளர் – ஸ்டாலின்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.