இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்போதைக்கு இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. இருந்தாலும் அது இப்போதைக்கு குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நிலையில், எல்லா ஸ்மார்ட்போன்களும் 5ஜி சேவையை பெறுவதற்கான சப்போர்ட்டை பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி இயங்கும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போன் 5ஜி ஆதரவை பெற்றுள்ளதா அல்லது இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிவது எப்படி? – வழிமுறை
- பயனர்கள் முதலில் தங்கள் போனில் செட்டிங்ஸ் ஓப்பன் செய்ய வேண்டும்.
- அதில் சிம் கார்டு அல்லது நெட்வொர்க்கை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் ‘விருப்பமான நெட்வொர்க் வகை’ தேர்வு செய்ய வேண்டும்.
- அந்த போன் 5ஜி சப்போர்ட் பெற்றிருந்தால் 2ஜி/3ஜி/4ஜி/5ஜி என அதில் இருக்கும்.
- இல்லையெனில் 2ஜி/3ஜி/4ஜி மட்டுமே இருக்கும். அப்படி இருந்தால் அந்த போனில் 5ஜி சப்போர்ட் இல்லை என அறிந்து கொள்ளலாம்.
- இந்தியாவில் இப்போது மலிவு விலையில் 5ஜி போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவை வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரியில் இந்த சேவையை வழங்கி வருகிறது.