Nobel Peace Prize: இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்?

உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் அழிந்து போன ஹோமினின் மரபணு மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி மகனுக்கு செக்; ஓபிஎஸ்சுக்காக இறங்கிய பாஜக!

இந்நிலையில் 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிங்கர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்கு கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

அதேப்போல் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாளயும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் 2022ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவை சேர்ந்த ஆல்ட் நியூஸ் (alt news) செய்தி நிறுவனத்தின் நிறுவனர்கள் பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் இது தொடர்பான தகவலை நார்வே நோபல் கமிட்டி வெளியிடவில்லை என்பதால் இதன் உண்மைத்தன்மை குறித்து பலரும் பரபரப்புடன் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு டிவிட்டர் பதிவின் மூலம் ஆத்திரமூட்டும் வெறுப்பு உணர்வை தூண்டியதாக முகமது ஜுபைர் மீது கடந்த ஜூன் மாதம் டெல்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஜூபைர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.