வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரானார்.
கடந்த மாதம்,செப்., 10ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் மூன்றாம் சார்லஸ் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், தீவுகளின் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள காமன்வெல்த் பகுதிகள் மற்றும் பிரதேசங்களின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் முயற்சிப்பேன். என் அம்மாவின் ஆட்சி காலத்தின் அர்ப்பணிப்பை எண்ணில் கூற முடியாது என்றார்.
முடிசூட்டு விழா:
இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement