காம்பியா: 66 குழந்தைகள் மரணம்; இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து காரணமா? – விசாரிக்கும் WHO

ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிட்டெட் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்களை ஆய்வு செய்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. மேலும், மேற்கு ஆப்ரிக்கா நாடுகளில் இந்த மருந்துகள் அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

WHO – டெட்ரோஸ்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸிடம் செய்தியாளர்கள் அந்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்கள் பற்றி கேள்வி எழுப்புகையில், “குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புகளுக்கும், 66 குழந்தைகளின் மரணத்துக்கும் இது காரணமாக இருக்கலாம். அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இது குறித்து இந்தியாவின் மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது” என்றுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட அந்த நான்கு மருந்துகள் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup .

மருந்து

காம்பியாவில் 28 குழந்தைகள் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூலை 19 அன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, காம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனைகளில் பாரசிட்டாமால் சிரப்பின் பயன்பாட்டை நிறுத்துமாறு கூறியிருந்தது.

“நோயாளிகளுக்கு இந்த மருந்துகளால் தீங்கு ஏற்படாமல் இருக்க, இவற்றைப் புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும்” என்று டெட்ரோஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பு தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தகவல் பதிவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.