'தாய் கிழவி' பாடலுக்கு குத்தாட்டம் போடும் பள்ளி சிறுவர்கள்… இதெல்லாம் டூ மச்…

மாணவர்கள் கல்வியை கற்றுக்கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் இடமாக பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுறோமே, தேர்வில் தேர்ச்சி பெருகிறோமோ ஒழுக்கமாக இருக்கனும் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். ஆசிரியரின் கம்பு மீதும் பெற்றோர் மீதும் இருந்த அச்சம்தான் அந்த ஒழுக்கத்துக்கு காரணமாக இருந்தது.

ஆசிரியர்களால் அடி வாங்கி, பல பனிஷ்மெண்டுகளை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர்கள் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால், இன்று பள்ளிக்கூடங்களில் சூழல் அவ்வாறு உள்ளதா என்றால் இல்லை. மாணவர்களை ஆசியர்கள் அடித்தாலும் குற்றம் பனிஷ்மென்ட் கொடுத்தாலும் குற்றம். இதனால் பல ஆசிரியர்களின் எல்லை மீறல் தடுக்கப்பட்டாலும் கூடவே மாணவர்களின் அராஜகமும் அதிகரித்துள்ளது. மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை பல அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது.

அதுபோன்ற பல நிகழ்வுகளை இணையத்தில் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் புதிய வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் குத்தாட்டம் போடுவதும் சினிமா வசனங்களுக்கு ரீல்சும் போட்டுள்ளனர். அது வகுப்பறைதானா அல்லது ஏதாவது சினிமா ஷூட்டிங்கா என்று குழம்பும் அளவுக்கு அவ்வளவு தெளிவாக, ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் தாய் கெழவி பாடலுக்கு சிறுவர்கள் சீருடையுடன் குத்தாட்டம் போடும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள இந்து அமைப்பின் நிர்வாகி, அமைச்சர் அன்பில் மகேஷை டேக் செய்துள்ளார். விரைவில் அந்த வீடியோ குறித்து முழு விவரம் தெரிய வரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.