திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால சாலை பக்தர்களுக்கு திறப்பு

* 3ம் கட்ட பணி ஜனவரியில் நிறைவடையும்
* அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயில்  தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகள் தீர்க்க கட்டப்படும் ஸ்ரீனிவாச சேதுவின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று அறங்காவல் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி லீலா மஹால் அருகில்  இருந்து ஸ்ரீவாரி சன்னிதி வரை கட்டப்பட்ட சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால சாலையை எம்எல்ஏ கருணாகர ரெட்டியுடன் இணைந்து நேற்று மாலை  திறந்து வைத்தார். மேம்பாலத்தில் பயணம் செய்து பின்னர் பேசுகையில், ‘ஐதராபாத், விஜயவாடா, சென்னை வழித்தடங்களில் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

போக்குவரத்து நெருக்கடி இல்லாமல்  நேரடியாக கபிலதீர்த்தத்தை அடைய முடியும். மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகளும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’  என்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி, எம்.பி. குருமூர்த்தி, மேயர்  சிரிஷா, துணை மேயர்கள் அபிநய், முத்ரா நாராயணா, கவுன்சிலர்கள் எஸ்.கே.பாபு, கே.ஆஞ்சநேயுலு, மாநகராட்சி எஸ்.இ. மோகன், மாநகராட்சி பொறியாளர் சந்திரசேகர், ஆப்கான் நிறுவன மேலாளர் ரங்க சுவாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.