தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்'
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சுயராஜ்யத்தை கனவு கண்டார், இந்த கனவை நிறைவேற்ற, பல துணிச்சலான வீரர்கள் அவருடன் இணைந்தனர். அதில் மிக முக்கியமான, மிகச் சிறந்த மராட்டிய வீரர்களில் ஒருவர் பாஜி பிரபு தேஷ்பாண்டே. இந்த பாஜி பிரபுவின் வீரக் கதையை மையமாக கொண்டு மராத்தி மொழியில் தயாரான ‛ஹர ஹர மகாதேவ்' தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.
ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை இயக்குநர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். இப்படத்தில், ஹிதேஷ் மோடாக் இசையமைப்பில் ‛வாரே சிவா' என்கிற பாடலை பாடியுள்ளார் தமிழ் பாடகர் சித் ஸ்ரீராம். வரும் அக்டோபர் 25ம் தேதி தீபாவளிக்கு மராத்தி மொழியுடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.