மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்குகொலை மிரட்டல் விடுத்த பீஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று முன்தினம் அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி உள்ளார்.இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மிரட்டல் விடுத்தவர், பீஹாரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பீஹார் போலீசார் உதவியுடன், தர்பங்காவைச் சேர்ந்த ராகேஷ் குமார் மிஸ்ரா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். வேலையில்லாமல் உள்ள அந்த இளைஞரை,மும்பைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement