பிரான்சின் பெண் எழுத்தாளருக்குஇலக்கியத்துக்கான நோபல் பரிசு| Dinamalar

ஸ்டாக்ஹோம், நடப்பாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆன் எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டது.உலகின் மிக உயரிய நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆன் எர்னாக்சுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சுயசரிதை புனைவுகளை எழுதத் துவங்கிய எர்னாக் சுக்கு, நினைவுக் குறிப்புகளை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து, நாவல் எழுதுவதை கைவிட்டார். அதன் பின், தன் வாழ்வில் தனக்கும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நடந்த நினைவுகளை மிக எளிய நடையில் எழுதத் துவங்கினார்.இவரது 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், பாலியல் அத்துமீறல், கரு கலைப்பு, உடல் உபாதைகள் மற்றும் அவரது பெற்றோரின் மரணம் உள்ளிட்டவை குறித்து மிக எளிமையாகவும், வெளிப்படையாகவும் பேசுகின்றன.எழுத்தாளர் ஆன் எர்னாக்சின் ஒட்டுமொத்த பங்களிப்பின் அடிப்படையில், அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.