மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேயர் உட்பட, 18 பேர் பலியாகினர்.
மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலபன் நகரம் உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், இங்குள்ள சிட்டி ஹால் என்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். இதில், 18 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோடோலபன் நகர மேயரும், அவரது தந்தையும் இந்த தாக்குதலில் இறந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சிட்டி ஹாலில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதலை நடத்தியது யார், எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணை துவங்கியுள்ளது.இதற்கிடையே, அருகில் உள்ள மொரேலோஸ் பகுதியில், மாகாண உறுப்பினர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சுட்டுவிட்டு தப்பி விட்டதாகவும், இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement