Video: கர்ப்பிணி என்றும் பார்க்காமல்… கதறும் சின்னதிரை நடிகை – கணவர் மீது குற்றச்சாட்டு

பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வருபவர் நைனா முகமது. இவர் தனது பெயரை அரணவ் என மாற்றிக்கொண்டு பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் திவ்யா ஸ்ரீதர் என்ற  தொலைக்காட்சி நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார். திவ்யா ‘கேளடி கண்மணி’, ‘மகராசி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர். 

‘கேளடி கண்மணி’ தொடரில் இருவரும் ஒன்றாக நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அரணவ்வை திவ்யாவும் காதலித்துள்ளார். இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் மட்டுமே தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் என்று கூறியதை அடுத்து திவ்யாவும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறினார். இதையடுத்து இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் திவ்யாவை அரணவ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திவ்யாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி, அவர் முதல் கணவரை விவாகரத்து செய்திருந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த ஐந்து மாதங்களாக திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில், திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். அந்த வகையில், அரணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் தன்னை அரணவ் பிடித்து தள்ளி விட்டதாக கூறி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று மாத கர்ப்பிணியான திவ்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம், திருவேற்காடு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் திருவேற்காடு மகளிர் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து நடிகையிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சின்னதிரை நடிகை திவ்யா

இதுகுறித்து எழுத்து பூர்வமான புகார்கள் ஏதும் வராத நிலையில், நடிகையின் தரப்பில் இருந்து புகார்கள் அளித்தால் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து மதத்தில் இருந்த நடிகையை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டு, தற்போது கர்ப்பிணியான தன்னை அடித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்திரை நடிகை குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.