போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு கூட்டம் அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநில காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை ஒட்டி நாளைய தினம் கவுஹாத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 25,000 கிலோ போதை பொருள் அழிக்கப்படுகிறது. ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் என திரிபுரா மாநிலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அழிக்கப்படவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளிட்டுள்ள தகவலின் படி, நடப்பு ஆண்டில் ஜூலை 30ம் தேதி வரை 82,000 கிலோ போதை பொருள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 1,09,000 கிலோ போதை பொருள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM