அமெரிக்கா திடீர் உத்தரவு; ஆடிப்போய் கிடக்கும் இந்திய அரசு!

பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா பயணமாகவோ வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு, அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகள் வழங்கி வருவது வழக்கமான ஒன்று தான்.

அவ்வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த எச்சரிக்கை அறிக்கையில் குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பி அடித்த திருமா; இந்து அமைப்புகள் ஷாக்!

அதேப்போல் கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் யாருமே செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என, இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலா தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன என்று அறிவித்துள்ளது.

சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென தாக்குதல் நடத்தலாம் என்றும் அந்த பயண ஆலோசனையில் கூறப்பட்டு உள்ளது.

6 நாளில் சுக்குநூறான மோடி கனவு; நேற்று எருமைகள்.. இன்று பசு மாடு!

அமெரிக்கா தனது மக்களுக்கு பிறப்பித்து உள்ள இந்த உத்தரவு அந்த நாட்டை பொறுத்தவரையில் சாதாரணமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் முகத்திரையை கிழித்து தொங்கப்போடும் வகையில் உள்ளதால் இந்திய அரசு ஆடிப்போய் கிடக்கிறது.

இதுகுறித்து சமூக வலைதளவாசி ஒருவர் கூறும்போது, ‘ஒரு சிலர் எங்கோ செய்யும் சில ஈன செயல்களுக்கு இந்தியர்கள் என்றால் மோசமானவர்கள் என அமெரிக்க அரசு சித்தரிப்பது வருந்தத்தக்கது. இம்மாதிரி திட்டமிட்டு இந்தியர்களை பற்றி பிரச்சாரம் செய்வது நல்லதல்ல’ என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.