ஆண்டுதோறும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தினம் : முதல்வர் அறிவிப்பு 

சென்னை: பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட தினம் விழா இனி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தின விழா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” நீர்வளம், நீர்மேலாண்மை, அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும். திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்!” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.