புதுடெல்லி: புனே & சத்தாரா ஆலையில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பாரத் போர்ஜ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து கல்யாணி எம்4 ரக கவச வாகனங்களை தயாரிப்பதற்கான ரூ.177.95 கோடி மதிப்பிலான ஆர்டரை பாரத் போர்ஜ் கடந்த 2021-ல் பெற்றது. அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு தயாரித்து வழங்குவதற்காக இந்த ஆர்டர் பெறப்பட்டது.
இந்நிலையில், பாரத் போர் ஜின் புனே & சத்தாரா ஆலையில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் பயன்பாட்டுக்காக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரடு முரடான நிலப்பரப்பு, சுரங்கங்கள் மற்றும் வெடிகுண்டு சாதனங்கள் (IED) அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் விரைவாக செல்லவும், ஆயுதப்படைகளின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கல்யாணி எம்4 கவச வாகனங்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாரத் போர்ஜ் தெரிவித்துள்ளது.