மியான்மரில் டோனி குபொட்டா என்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு ராணுவத்துக்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்த காரணத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அன்டார்டிகாவில் ஐந்து மாதங்களுக்கு தபால் அலுவலகம் நடத்தும் பணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
மெக்ஸிகோவின் சான் மிகுவல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இரண்டு வருடங்களாக கென்யாவில் நீடித்து வரும் வறட்சியின் காரணமாக உலகின் 2 சதவிகித வரிக்குதிரைகள் அழிந்துவிட்டதாகத் தகவல்.
உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகன் முஹூசி கைனெருகபா பலமுறை அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கப்போவதாக ட்வீட் செய்ததால் கென்ய மக்களிடம் யோவேரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இஸ்ரேல் படையினர் அந்த நாட்டின் மேற்கு கரையில் நடத்திய ராணுவ சோதனையின்போது 2 பத்திரிகையாளர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
சீனாவில் மனித உரிமைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை ஐ.நா நிராகரித்தது.
ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக 2.5 பில்லியன் டாலர் வழங்க முடிவு செய்திருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மற்றும் நாசாவின் ஹபுல் மூலம் விண்வெளி தூசிகளின் செயல்பாடுகளை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கலிபோர்னியாவில் 8 மாதக் குழந்தையுடன் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம், சடலமாக மீட்பு.