டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு


டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது பிரித்தானிய இளவரசர் ஹரி சட்ட வழக்கு.

ANL வியாழனன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர், அதில் பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு | Prince Harry Sues Uk Media Over Privacy BreachePA

இந்த சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் மற்றவர்களில் லிஸ் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், ஜானின் கணவர் டேவிட் ஃபர்னிஷ் மற்றும் கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் லாரன்ஸின் தாயார் டோரீன் லாரன்ஸ் ஆகியோரும் அடங்குவர் என உள்நாட்டு செய்தி நிறுவனமான PA அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள இந்த குழுவிற்கான சட்ட நிறுவனமான ஹாம்லின்ஸ்(Hamlins) வெளியிட்ட அறிக்கையில், அசோசியோட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் Associated Newspapers Limited (ANL) மூலம், அவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் தனியுரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான கட்டாய மற்றும் வேதனையான ஆதாரங்களை வழக்கு தொடுத்து இருப்பவர்கள் வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

மெயில் ஆன்லைன் மற்றும் தி மெயில் ஆன் சண்டே ஆகியவற்றின் வெளியிட்டாளரான ANL வியாழனன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது.

டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு | Prince Harry Sues Uk Media Over Privacy Breache

ஹம்லின்ஸ், ANLக்கு எதிராக வெளியிட்ட சட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையில், கார்கள் மற்றும் வீடுகளுக்குள் ரகசியமாக ஒட்டுக் கேட்கும் சாதனங்களை வைப்பதற்கு தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது, தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தல் முக்கியமான தகவல்களுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் செலுத்துதல் மற்றும் மருத்துவப் பதிவுகளைப் பெற தனிநபர்களை போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத செயல்கள் என்று தெரிவித்துள்ளது.

சட்ட நிறுவனமான ஹாம்லின்ஸ் இளவரசர் ஹாரி மற்றும் ஃப்ரோஸ்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதே நேரத்தில் லாரன்ஸ், ஹர்லி, ஜான் மற்றும் ஃபர்னிஷ் ஆகியோர் சட்ட நிறுவனமான கன்னர்குக் (Gunnercooke) பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

டெய்லி மெயில் மீது வழக்கு தொடர்ந்துள்ள இளவரசர் ஹரி, மற்றும் 5 பேர்: தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு | Prince Harry Sues Uk Media Over Privacy BreacheREUTERS

பிரித்தானியாவில் போன் ஹேக்கிங் ஊழல், செய்தித்தாள்களில் சட்டவிரோதமான செயல்பாடுகள் தொடர்பாக பல சேதங்கள் கோரப்பட்டுள்ளன, இத்தகைய பல உரிமைகோரல்களில் பெரும்பான்மை தீர்க்கப்பட்டு விட்டாலும் ANLக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் கோரிக்கை இதுவாகும்.

கூடுதல் செய்திகளுக்கு: பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன்

இந்த சட்டவிரோத செயல்பாடுகளால் முர்டோக்-க்கு சொந்தமான நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.