தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்..!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்கினாரா? மீண்டும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

அதே வேளையில், அண்மையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியில் பணமிழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட மாநிலம் முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையொட்டி ட்விட்டரில் பதிவு போட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் ஆர்.என். ரவியை சாடியிருந்தார். ”ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுனர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது! ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1 ஆம் தேதியே ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அக்., 17 ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.