வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் பி.என்.ஜி., மற்றும் சி.என்.ஜி. காஸ் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு்ள்ளது.
சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் டில்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட பெருநகங்களில் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]() |
தலைநகர் டில்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.75.1 ஆக இருந்த நிலையில் ரூ.3 உயர்ந்து ரூ. 78.1 ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.08) காலை முதல் அமலுக்கு வருகிறது. சி.என்.ஜி., விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement