வில்லியனுார்: இரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள கம்பளிகாரன்குப்பம் காலனியை சேர்ந்த 27 வயது பெண், புதுச்சேரியில் உள்ள ‘பியூட்டி பார்லரில்’ வேலை செய்து வருகிறார். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.நேற்று முன்தினம் வேலை முடிந்து, இரவு 8:00 மணிக்கு கரிக்கலாம்பாக்கம் அடுத்த நத்தமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். தனியாக சென்ற போது, இருள்சூழ்ந்த பகுதியில் நின்றிருந்த ஒருவர், அந்த பெண்ணை பின் தொடர்ந்தார்.சிறிது துாரம் சென்றதும், அப்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சல் எழுப்பினார்.சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்ததால், அவர் தப்பியோடினார்.
இளம்பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் குறித்து இரவே மங்கலம் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரித்தார்.இளம்பெண்ணிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டது, மங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிய வந்தது.அந்த சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அரியாங்குப்பம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement