
பிரபாஸ் படத்தால் பின்வாங்கிய விஜய்யின் வாரிசுடு
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தபடம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் அதே நாளில் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சங்கராந்திக்கு பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107 வது படமும் வெளியாவதால் தியேட்டர் பிரச்சினை காரணமாக விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கில் சங்கராந்தி முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. என்றாலும் தமிழில் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகிறது.