பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி என்ற வழக்கறிஞருக்கும், ரஷ்ய மனித உரிமை அமைப்பான ‘மெமோரியல்’ மற்றும் உக்ரைனின் ‘சென்டர் ஃபார் சிவில் லிபர்டீஸ்’ ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.