புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், வழக்கு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் -ல் உள்ள 35 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர்.
புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்துள்ளாத எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படியில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணையைத் தீவிரப்படுத்தும் விதமாக இந்த புதிய சோதனைகள் நடத்தப்படுகிறது. இன்று அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனைகள் மூன்று மாநிலங்களில் உள்ள மதுபான நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் போன்றவர்களிடம் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய தொடர்சோதனைகளின் விளைவாக மதுபான வியாபாரி சமீர் மகேந்த்ரு கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அரசு கடந்த ஆண்டு நவ.17ம் தேதி அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்திருப்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜ்ரிவால் அரசு இந்தாண்டு ஜூலை மாதம் புதிய மதுபானக்கொள்கையை திரும்ப பெற்றது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக துணைநிலை ஆளுநர் 11 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
வழக்கு தொடர்பான சிபிஐ முதல்தகவல் அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சில அரசு அதிகாரிகளின் பெயர்கள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய புதிய சோதனைகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். இந்தியில் உள்ள அந்த பதிவில், “கடந்த மூன்று மாதங்களாக, 300க்கும் அதிகமான சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள், 24 மணிநேரமும் நடத்திய 500க்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் தவறு ஏதும் நடக்கவில்லை.
இப்படிபட்ட கேவலமான அரசியல் காரணமாக சில அதிகாரிகளின் பொன்னான நேரம் வீணாக்கப்படுகிறது. இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேற்றப்பாதையில் பயணிக்கும்?” என்று தெரிவித்துள்ளார்.
500 से ज़्यादा रेड, 3 महीनों से CBI/ED के 300 से ज़्यादा अधिकारी 24 घंटे लगे हुए हैं- एक मनीष सिसोदिया के ख़िलाफ़ सबूत ढूँढने के लिए। कुछ नहीं मिल रहा। क्योंकि कुछ किया ही नहीं
अपनी गंदी राजनीति के लिए इतने अधिकारियों का समय बर्बाद किया जा रहा है। ऐसे देश कैसे तरक़्क़ी करेगा? https://t.co/VN3AMc6TUd
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 7, 2022