சான் பிரான்சிஸ்கோ-அமெரிக்காவில் மருமகளை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி முதியவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பிரெஸ்னோ நகரில் வசிப்பவர் சிடல் சிங் தோசாஞ்ச்,74. இவரது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மருமகள், குர்பிரீத் கவுர், பிரெஸ்னோ நகரில் இருந்து 240 கி.மீ., துாரத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த குர்பிரீத், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தன் மகனை விவாகரத்து செய்ய மனு செய்த மருமகள் மீது ஆத்திரம் அடைந்த சிடல் சிங், கடந்த வாரம் காரில் சான் ஜோஸ் நகரில் உள்ள வால்மார்ட் நிறுவனத்துக்கு வந்தார்.அங்கு, வாகனம் நிறுத்துமிடத்தில் காத்திருந்து, மருமகள் குர்பிரீத் வந்த போது, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார்.இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து, சிடல் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement