முல்லைத்தீவு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை கடந்த மாதத்தில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையை மாற்றியமைத்து புதிய விலையில் விற்பனை செய்தமை தொடர்பில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் குறித்த பொருட்களை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 21 வழக்குகளும், அத்தியாவசிய பொருட்களின் விலையினை வெளிக்காட்டாது விற்பனை செய்தமை தொடர்பாக 03 வழக்குகளும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் 88 வழக்குகள் பாரப்படுத்தப்பட்டு, தண்டப்பணமாக இரண்டு இலட்சத்து 82 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.