தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி பரப்புரை செய்ததாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக ராஜபாளையத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர்; வள்ளலாருடைய மிக முக்கியமான கொள்கை பசிப்பிணி போற்றுதல், அன்னதானம், புலால் மறுத்தல், மதுவிலக்கு. வள்ளலார் உடைய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வள்ளலாருக்கு தமிழக அரசு மரியாதை செலுத்த விரும்பினால், பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
நாங்கள் ஆன்மீகத்திற்கு விரோதி இல்லை என்று அறிவித்தால் மட்டும் போதாது. வள்ளலார் உடைய 200 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நம்முடைய மாநில அரசாங்கம் பூரண மதுவிலக்கு கொள்கையை புலால் மறுத்தல் கொள்கையில் உணவு சட்டம் கொண்டுவர வேண்டும்.
AIMS : மக்கள் கவலையில் காத்திருக்கிறார்கள்
ஆண்டாள் தாயார் குறித்து வைரமுத்து மிகவும் அவதூறாக ஒரு கருத்தை பரப்பினார். இதற்காக தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நாங்கள் புகார் கொடுத்தோம். வழக்கு பதிவு செய்தோம். குளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு அது ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை செய்து கடந்த வாரம் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
வைரமுத்து பேசியதில் தவறு இல்லை என்ற தொனியிலே அந்த கருத்தானது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது ஆண்டாள் பக்தர்கள் அனைவருக்கும் வேதனை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் சட்டம் ஒழுங்கு விஷயத்திலே கவனம் செலுத்தாமல் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இந்த விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக சனாதனம், விடுதலை சிறுத்தைகளை வைத்து சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.
கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டாலும், நீர்நிலைகளிலே கனிம வளங்கள் கடத்தப்பட்டாலும் மண் கடத்தல் நடைபெற்றாலும் இந்து மக்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசாங்கத்தினுடைய ஆட்சியிலே கனிமவள கொள்ளை மணல் கொள்ளை என்பது ஆற்றிலே குளிக்க போன இடத்தில் 3 மாணவர்கள் விழுந்து இறக்கும் அளவு உள்ளது. மண் அள்ளுவதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றார்கள். மணல் கடத்தலை தடுக்க வேண்டி நாங்கள் நிச்சயமாக போராட்டங்களை சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி மேற்கொள்வோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்பனை, திமுகவினர் காவல் நிலையங்களுக்குள்ளேயே வந்து காவல்துறையை மிரட்டுகின்ற அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் வீட்டின் மீது குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். அந்த தடை செய்யப்பட்ட தேச இயக்கங்களை ஆதரித்து திண்டுக்கல் கொடைரோடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழகத்தினுடைய வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கின்ற அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை தடை செய்யாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாது. டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருக்கிறார்கள்.
சுற்று சூழல் மாசு என்பதை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இந்த தடை உத்தரவை விலக்கிக் கொள்ள மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திமுகவின் கடமை, பட்டாசு தொழிலை பாதுகாப்பது மத்திய அரசாங்கத்தினுடைய கடமையும் கூட.
பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது என்பது, இந்து சமய சடங்குகளின் மீது விதித்திருக்கின்ற தடையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். வெடி வழிபாடு என்பது நம்முடைய சமயத்திலே கலாச்சாரத்தில் பண்பாட்டில் ஒரு அங்கம். எனவே இதை காப்பாற்றுவதற்கு இந்த தடையை நீக்குவதற்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.