புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி அமைப்பின் தலைவர் பிலால் அகமது பெய்க், ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி அமைப்பின் கமாண்டர் ஜாஃபர் இக்பால், அவருடன் இணைந்து செயல்பட்டு வரும் ரஃபிக் நய், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது காண்டூ, ஷவுகத் அகமத் ஷேக், பசித் அகமது ரெஷி, பஷிர் அகமது பீர், இர்ஷத் அகமது ஆகிய 10 பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.