வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை–அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நாளை நடக்கும் கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலையின் பேச்சை கேட்க, 2,000-க்கும் அதிகமான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை, செப்டம்பர் 30-ம் தேதி, அமெரிக்கா சென்றார்.கலிபோர்னியா மாநிலம்லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செயல்படும் ‘ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, ‘சர்வதேச தலைவர் பெல்லோஷிப்’ என்ற பயிற்சி வகுப்பை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இதில் பங்கேற்பதற்காக, அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், ஒரு வார பயிற்சியை முடித்து, சான்பிரான்சிஸ்கோ செல்லும் அண்ணாமலை, நாளை அங்கு நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.இது தொடர்பாக, வெளிநாடு வாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்தில், தனிப்பட்ட அழைப்பை தவிர, வேறு எந்த விளம்பரமும் செய்யவில்லை.
ஆனால், சமூக ஊடகங்கள் வாயிலாக, அண்ணாமலை வருகையை அறிந்த, அமெரிக்க வாழ் தமிழர்கள், அவரின்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம்காட்டி வருகின்றனர்.முதலில், 200 பேர் அமரும் அரங்கத்தை ஏற்பாடு செய்தோம். அது போதாது என்பதால், 500 பேர் வரை அமரும் அரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நாள் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சான்பிரான்சிஸ்கோபொதுக்கூட்டத்தை முடித்து, வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரத்திற்கு செல்கிறார்.’மைக்ரோசாப்ட்’ போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்குள்ளன. இங்கும் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அண்ணாமலை உரையாட உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement