இளைஞர்களுக்கும் நல வாரியம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இளைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: பல்வேறு வாரிங்களை அமைத்தது போல் இளைஞர்களுக்கும் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இளைஞர்களை நேசிக்கும் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று ஓராண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை திட்டங்களை இளைஞர் சமுதாயத்திற்காக தொடர்ந்து அறிவித்து பல சாதனைகளை செய்து வருகிறார்.

இதற்காக இளைஞர் சமுதாயம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடமைப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பாக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. அதுபோல் இளைஞர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.