இஸ்ரேலில் இந்திய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு இந்தியாவில் வாழும் யூத இனத்தை சேர்ந்த 18 வயதான இயோல் லெகின்ஹல் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது குடும்பத்துடன் இஸ்ரேலில் குடிபெயர்ந்தார்.
நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோது நேரிட்ட சண்டையில் அவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக 13 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் 8 பேரை இஸ்ரேல் போலீஸ் கைது செய்திருப்பதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.