எஸ்.சி பட்டியலில் கிறிஸ்தவர்கள்?; திடீரென உத்தரவிட்ட மோடி அரசு!

இந்து மதத்தில் இருந்து பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு செல்லும் தலித்துகள் பட்டியல் இனத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதம் தழுவுகிற மக்கள் மட்டும் பட்டியல் இன பிரிவின் கீழ் வருவது இல்லை.

தலித் மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீடு காரணமாக இந்து தலித்துக்களுக்கும், மதம் மாறிய தலித்துக்களுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதனால் சமூகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, தனிமைப்படுத்தப்படுகிறோம் என்கின்ற எண்ணம் சிறுபான்மை சமூகத்திடம் அதிகமாகி வருவதால், இந்து தலித்துகளுக்கு வழங்கப்படுவதைப்போல் தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

திருப்பி அடித்த திருமா; இந்து அமைப்புகள் ஷாக்!

அதே சமயம் தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டால் மதமாற்றங்கள் அதிகரிக்கும் என்பதே இந்து அமைப்புகளின் வாதமாக உள்ளது.

ஆனால் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் மும்பை, டில்லி, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் இருக்கும் பல உயர்க்கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்களால் தான் நடத்தப்படுகின்றன. ஆனாலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காத நிலைதான் நீடிக்கிறது.

இந்நிலையில் தான் இதுகுறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்து இருக்கிறது.

எல்லை மீறும்.. திருமாவளவன்; முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்!

3 உறுப்பினர்களுடன் இயங்கும் இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலை கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி வகுப்பை சேர்ந்தவர்கள், அதே சமயம் அரசியல் சாசனத்தின் 341வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என கூறுபவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்கப்படுவது பற்றி இந்த கமிஷன் ஆராயும்.

தலித்துகள் மதம் மாறிய பிறகு அவர்களுடைய பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களையும் கமிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

மேலும் இது தொடர்பாக எடுக்கப்படுகிற முடிவால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தன்னுடையை அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால் கல்வி, வேலை வாய்ப்பில் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகை இவர்களுக்கும் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதால் மத்திய அரசின் முடிவை பலரும் வரவேற்று கருத்து தெரிவிக்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் பாஜகவுக்கு விழுவது இல்லை என்று பேசப்படுகிற நிலையில் மத்திய அரசின் இந்த திடீர் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே சமயம் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு கட்டாயம் தலித் கிறிஸ்தவர்களுக்கு விடியல் தருவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் அடித்துக்கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.