திருத்தணியில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை கையோடு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது 7 வயது மகனுடன் நேற்றிரவு வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகள் சிறுவன் மேலேயே படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 பாம்புகளுடன் வந்து அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM