"கவர்னர் என்றால் பிரச்சனை செய்பவர் அல்ல" – தமிழிசை!

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை முன்னதாக கோவில் பொது தீட்சிதர்கள் மரியாதை செய்து அழைத்து வந்தனர். பின்னர் கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கனக சபைக்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்து வைத்தனர்.

பின்னர் வெளியே வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்; பிரதோஷ நாளில் நடராஜரை தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோவிலுக்கு வரும்போது நான் மிகவும் இன்பம் அடைவேன். தமிழக மக்கள் ஆனந்தமாக இறைவனை தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வருவது ஒரு சைக்கோ தெரபி, என்ன பாரம் இருந்தாலும் சரியாகிவிடும்.

வெளிநாடுகளில் மூளைக்கு மூளை மனநல மருத்துவமனை இருக்கும். தமிழ்நாட்டில் கோவில்கள் இருக்கும் இறைவன் காலடியில் கஷ்டங்களை சமர்ப்பித்து விட்டால் கஷ்டங்கள் நீங்கிவிடும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்கும் ஒரு முயற்சி நடக்கின்றது. தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான்.

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டது. அதேபோன்று வேற எந்தெந்த பொது துறைகளை தனியார் மையம் ஆக்கப்படும் என கேள்வி எழுப்பிய போது; எங்களின் கொள்கை முடிவில் எது எது மக்களுக்கு நல்லதோ அதை செய்வோம். பொதுத்துறைக்கு சொந்தமானதை தனியாருக்கு மாற்றம் செய்வதற்காக தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உங்களை நியமனம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகிறாரே என்ற கேள்விக்கு;

எதிர்க்கட்சித் தலைவர் சிவா அப்படித்தான் சொல்வார். இந்த சிவா கிட்ட தான் முறையிட வேண்டும்.

குழந்தைகளும் நல்லா படித்து முன்னேற வேண்டும் என்பது தான் நமது எண்ணம். இதேபோல் நவோதயா வேணாம், கேந்திரிய வித்யாலயா வேண்டாம்,இப்படியே சொல்லி சொல்லி மாணவ மாணவிகளை கல்வித்தரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார்கள்.

அரசாங்க பள்ளிகளும் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். அதைத்தான் தாங்கள் செயலாற்றி வருகிறோம். மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்ற அக மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

கேரளா மற்றும் தமிழகத்தில் மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதைப் பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு; கவர்னர் என்றால் பிரச்சனை செய்பவர்கள் இல்லை என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.