கார்த்தி சிதம்பரம் ஆதரவு: தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை! சசிதரூர்

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என போட்டி வேட்பாளர் சசிதரூர்  விளக்கமளித்துள்ளார்.  சசிதரூருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக எம்.பி. கார்த்தி சிதம்பரம் அறிவித்துள்ளார். கட்சியில் சீர்திருத்த சிந்தனை அவசரமாக தேவைப்படுவதால் சசிதருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான  தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கேரள மாநில எம்பி சசிதரூர் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தியில் இருந்த ஜி23 குழுவில் உள்ள பலர், அதே குழுவைச் சேர்ந்த சசிதரூருக்கு ஆதரவு அளிக்காமல் கார்கேவுக்கு ஆதரவாக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தனர். இதனால், கார்கேவுக்கு ஜி23 குழு ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பல  இதில் மூத்த தலைவர்கள் மல்லிகர்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.  மேலும் சோனியாவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சசிதரூருக்க எந்தவொரு தலைவரும் நேரடி ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. மேலும் கேரள மாநில காங்கிரசாரும் ஆதரவு தர முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் கார்கேவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.  கார்கே வெற்றி பெற்றாலும், அவர் காந்தி குடும்பத்தின் விசுவாசியாகவே இருப்பார், மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்று சசிதரூர்  ஆதவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சசிதரூர் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக திடீரென தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், விளக்கம் அளித்த சசிதரூர், காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், கடைசிவரை போட்டியில் கலந்து கொண்டு,  முடிவு வரை இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும், போட்டி பாதையில் வெளியேறுவது எப்போதும் தனது பழக்கம் இல்லை கூறியதுடன், தற்போது நடப்பது நட்பு ரீதியிலான போட்டி என்றும் கூறினார்.

இந்த நிலையில், நான் சசிதரூரை ஆதரிக்கிறேன் என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.  இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூருக்கு ஆதரவு தருவதாகவும்,  அவரது நடைமுறை நவீனத்துவம் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்ட அவரது முறையீடு, போராடுவதற்கு முக்கியமானது,  பிரித்தாளும் அரசியல். வழக்கம் போல் தற்போதைய நிலையும் வணிகமும் எங்கள் கட்சிக்கு உதவாது. எங்கள் கட்சியில் சீர்திருத்த சிந்தனை அவசரமாக தேவைப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.