கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்… மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (அக். 9) சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில், மயிலாப்பூரில் உள்ள தெருவோரத்தில் இருந்த கடைகளில் காய்கறி வாங்கினார். இதனால், அப்பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது. 

இதுகுறித்த வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கடையில் இருந்த கிழங்கு வகைகளை மத்திய அமைச்சர் பக்குவமாக பார்த்து வாங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த வேறு கடையில் ஒருசில கீரைக்கட்டுகளையும் வாங்கினார். காய்கறிகளை வாங்கும்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் அவருடன் இருந்து அவருக்கு உதவிசெய்தார்.

அப்போது, அங்கிருந்த கடைக்காரரிடமும், பொதுமக்களுடனும் அவர் உரையாடினார். தொடர்ந்த, அங்கிருந்த பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த வியாபாரிகளிடமும் அவர் பேசினார். இதுகுறித்த மற்றொரு வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மக்களோடு மக்களாக நின்று மயிலாப்பூர் மார்க்கெட்டில் கீரைக்கட்டுகளை வாங்கிய நிர்மலா சீதாராமனின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் வரத்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்தார். பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சராதக பதவிவகித்தார். பின்னர், 2019ஆம் ஆண்டில் இருந்து மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.