சென்னை நந்தனத்தில் அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் அந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் சாலையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி மீது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த இளைஞர் மோதியதில் அந்த பெண்மணி படுகாயத்துடன் நிலைகுலைந்து சாலையில் விழுந்துள்ளார். இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நந்தனம் தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM