ராஜராஜ சோழன் இந்து இல்லை என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றுகின்றனர் என்றும் இப்படியே போனால் தமிழர்களின் அடையாளங்களை ஆரியர்கள் முழுமையாக அபகரித்துக்கொள்வார்கள் என்றும் காரசார கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
ராஜராஜ சோழன் சிவனை வழிபட்ட சைவன், அக்காலத்தில் பல வழிபாடுகள் இருந்தாலும் இந்து என்று ஒன்று இருந்ததாக வரலாறு இல்லை என்று திராவிட கொள்கையாளர்கள், சீமான், கமல்ஹாசன் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெவ்வேறு வழிபாடுகளை கொண்ட தமிழர்களை இந்துக்கள் என்று ஆங்கிலேயர்கள் அழைத்ததை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இந்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கஸ்தூரி தனது பதிவில், எவ்வளவு கேவலமான அரசியல். #tamilarenotHindus அப்போ தமிழன் யார் என்ற கேள்வி வருதில்லயா? ராஜராஜன் சைவன் என்று கூப்பாடு போடுபவர்கள் கூட தமிழன் சைவம் #TamilsAreShaivites என்று பதிவிடாமல் தமிழர் இந்து அல்ல என்று சொல்வதின் உள்நோக்கம் புரிகிறதா ? மாற்று மதத்தினரின் தமிழ்த்தனத்தை தூக்கி பிடித்து இந்து நம்பிக்கைகளை மட்டும் மட்டம் தட்டி இந்துவாக தொடர்ந்தால் தமிழரே இல்லை , வேசி மகன் என்றெல்லாம் சொல்லி எப்படியாவது மக்களை பிரித்து ஆள துடிக்கும் சிறுபான்மை வியாபாரிகள் கனவு பலிக்காது. Tamil History is Hinduism’s history என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியை ட்வீட்டுக்கு நெட்டிசன் ஒருவர், தமிழன் எப்படி சைவன் என்று சொல்லமுடியும்? தமிழன் கிறிஸ்துவராகவோ, முஸ்லிமாகவோ, நாத்திகனாகவோ கூட இருக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி Exactly. தமிழன் இந்துவாக இருக்க கூடாது. முஸ்லிம் கிறிஸ்டின் நாத்திகனாக இருக்கலாம். தமிழன் இந்து இல்லை என்று சொல்லும் எவனும் தமிழன் முஸ்லிம் இல்லை என்றும் கிறிஸ்டின் இல்லை என்றும் எழுத மாட்டான். இதுதான் பகுத்தறிவு லாஜிக் என்று இவ்வாறு கஸ்தூரி பதில் கொடுத்துள்ளார்.
நடிகை கஸ்தூரி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அரசியல், சமூகம்,மொழி உள்ளிட்ட பல பிரச்சினைகளை குறித்து பேசி வருகிறார். அதில், அவரது பல
கருத்துக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும் உள்ளது.