தீபாவளி பண்டிகை நேரத்தில் பரிசு பொருள் அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாக இணைய தள மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்
இதுதொடர்பில் இந்திய சைபர் கிரைம் பொலிவார் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த மோசடியில் பணத்தை இழந்த சிலர் சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை nதிர்வரும் 24 ஆம்திகதி வருவதையொட்டி மர்ம ஆசாமிகள் Online னில் பரிசு பொருள் அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாக கூறி ஏதேனும் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி சைபர் கிரைம் பொலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.