வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-‘பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் தலைவிரித்து ஆடுவதால், பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என, தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், தன் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு:பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் கட்டுப்பாடு இன்றி தலைவிரித்து ஆடுகின்றன. அதனால், பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மக்கள், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதேபோல், இந்தியாவின் சில பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இந்தியா செல்பவர்கள் கவனமுடன் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement