பாம்புகள் மூலம் பணத்தை அள்ளும் கல்லூரி மாணவர்! எப்படி சாத்தியம்? நம்பமுடியாத ஆச்சரியம்


கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் பாம்புகள் மீது காதல் கொண்டு அதை வளர்த்து பிறகு விற்பனை செய்து அதிகம் பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து கேரளாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நம்பமுடியாத மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
அதன்படி நாய், பூனை வளர்த்து வந்தவர்கள் பலர் வெளிநாட்டு பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

முக்கியமாக ஆப்பிரிக்க மலைப்பாம்புகள் மிகவும் பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில் கன்னூரை சேர்ந்த முகமது ஹிசம் என்ற கல்லூரி மாணவர் பாம்புகளை வாங்கி வளர்த்து அதை விற்பனை செய்து வருகிறார், பாம்பு என்றால் படையே நடுங்கும் என ஒரு வாக்கியம் உண்டு, ஆனால் அந்த பாம்புகள் மீது முகமது கொண்ட காதல் உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது.

பாம்புகள் மூலம் பணத்தை அள்ளும் கல்லூரி மாணவர்! எப்படி சாத்தியம்? நம்பமுடியாத ஆச்சரியம் | Student Sales Snakes Kerala People Pet

english.mathrubhumi

இரண்டு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறிய பாம்புகள் பலவற்றை வைத்திருக்கும் முகமது அது போன்ற பாம்புகள் ரூ 25,000ல் இருந்து ரூ 4 லட்சம் வரையில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.

இந்த பாம்புகள் எல்லாம் விஷத்தன்மை இல்லாதவை என்பது முக்கிய விடயமாகும்.
தொடர்ந்து உயிர் வாழ இந்த சிறிய பாம்புகள் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து எலிகள் வரையாவது சாப்பிட வேண்டுமாம்.

முகமது கல்லூரி செல்லும் போது அவர் குடும்பத்தார் பாம்புகளை கவனித்து கொள்கின்றனர்.
பாம்புகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளையும் அவர் வளர்த்து விற்பனை செய்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.