வாஷிங்டன்: தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் இந்தியா வாங்கும் என பெட்ரோலியம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் இந்தியா வாங்கும்.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்டவற்றை பிறப்பித்து ரஷ்யாவுக்கு நெருக்கடி அளித்தது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டுடனான இந்தியாவின் பொருளாதார உறவுக்கும் நெருக்கடி அளிக்கப்பட்டது.
எரிசக்தி சந்தைகளில் நிலையான, எரிசக்தியாக மாற்றும் இந்தியாவின் தீர்மானத்தை எந்த வகையிலும் குறைக்க அனுமதிக்காது. பசுமை எரிசக்தியில் வலுப்படுத்தவும் தீவிரப்படுத்த தீர்மானம் செய்துள்ளோம்.
பெட்ரோல் மற்றும் டீசலைப் பொறுத்தவரை, வட அமெரிக்காவில் 43-46% விலை அதிகரிப்பு இருந்தால், இந்தியாவில் 2% அல்லது அதற்கு மேல் மட்டுமே விலையை உயர்த்த அனுமதிக்கிறோம்.
சராசரியுடன் ஒப்பிடும்போது நமது தனிநபர் நுகர்வு 1/3ல் உள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில், உலகளாவிய தேவையில் 25% இந்தியாவில் இருந்து வரும். பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி ஆற்றல் முக்கிய பங்காகும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு முடிவு குறித்து, நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement