டெல்லி: மதம் மாறிய பட்டியலின மக்கள் பட்டியலினத்திலேயே தொடர்வது குறித்து ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வரையறையை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது இந்தியாவில் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதேனிடையே மதம் மாறுவார்கள் பட்டியலினத்தில் இருந்து நீக்கப்படும் சூழல் இருந்து வரும் நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மதம் மாறியவர்களை பட்டியலின தகுதி வழங்க பாஜக ஒன்றிய அரசு மறுத்து வரும் நிலையில் வரும் 11-ம் தேதிக்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 நபர் குழுவை அமைத்திருக்கும் ஒன்றிய அரசு மதம் மாற்றத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பட்டியலினத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய உத்தரவிட்டுள்ளது.