சென்னை: மிலாது நபி திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் ரவி செய்தியில் தகவல் அளித்துள்ளார். அமைதியை பரப்பிய முகமது நபி அவர்கள் பிறந்தநாளை நினைவு கூர்ந்து போற்றி கொண்டாடி மகிழ்வோம் என்று ஆளுநர் கூறியுள்ளார். அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாட வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.