ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது கௌரவமாக கருதிவந்த முக்கிய பாலம் ஒன்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட விடயம் ரஷ்ய தரப்பில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அந்த பாலம் கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு முக்கியமான பாலமாகும்.
புடின் கைப்பற்றிய கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் வகையில் The Kerch bridge என்னும் ஒரு பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த பாலம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த பாலம் தகர்க்கப்பட்டதன் பின்னணியில் உக்ரைனின் இரகசிய உளவாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த பாலம் தகர்க்கப்பட்டது புடினுக்கு பெரும் பின்னடைவாகும். காரணம், அந்த பாலம் வழியாகத்தான் உக்ரைனில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யப் படையினருக்குத் தேவையான அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வந்ததாம்.
Credit: East2West
ஆகவே, தற்போது அந்த பாலம் தகர்க்கப்பட்டுள்ள விடயம், உக்ரைன் போர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
வெடிகுண்டு நிரப்பிய ஒரு வாகனத்தைக் கொண்டு அந்த பாலம் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
உண்மையில் கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு பாலமும், அதன் அருகிலேயே ஒரு ரயில் பாலமும் உள்ளன. தற்போது வாகனங்கள் செல்லும் பாலத்தில் ஒரு பகுதி உடைந்து கருங்கடலுக்குள் மூழ்கி விட்டது.
Credit: East2West
வெடிவிபத்து நடந்தபோது, அந்த பாலத்தின் அருகில் உள்ள ரயில் பாலத்தில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் ஒரு ரயில் சென்று கொண்டிருக்க, அந்த ரயிலும் தீப்பற்றி எரிவதையும் வெளியாகியுள்ள காட்சிகளில் காணமுடிகிறது.
ஏற்கனவே போரில் ரஷ்யா பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது இந்த பாலம் தகர்க்கப்பட்ட விடயம் புடினுக்கு மேலும் எரிச்சலையூட்டலாம் என்பதால், அணு குண்டு வீசிவிடுவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் அவர் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Credit: East2West
Credit: Reuters
]Y3ICW9\