வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தாகா: வங்கதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள ஹிந்து கோயிலில் இருந்த கடவுள் சிலையை சேதப்படுத்தியவர்கை ளபோலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று காலை தவுதியா கிராமத்தில், இருந்த காளி கோயிலில் சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோயிலை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து, சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த மார்ச் 17 ல், தாகாவில் உள்ள இஸ்கான் கோயில் சேதப்படுத்திய கும்பல், அங்கிருந்த சிலைகளை எடுத்து சென்றது. கோயிலில் இருந்தவர்களையும் அந்த கும்பல் தாக்கியது. கடந்த ஆண்டு அக்., மாதம் நயாகாளி நகரில் உள்ள கோயிலும் சேதப்படுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement