வாரணாசி: மூன்றாவது முறையாக, நேற்று ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் சக்கரங்கள் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தின் காந்தி நகர் – மஹா., தலைநகர் மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில், செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சில தினங்களுக்கு முன் குஜராத்தின் ஆனந்த் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, குறுக்கே வந்த ஒரு பசு மாடு மீது மோதியது.
இதில், ரயிலின் முகப்பு பகுதி சேதமடைந்தது. இதே ரயில் ஆமதாபாத் அருகே புனித் நகர் பகுதியில், தண்டவாளத்தின் குறுக்கே வந்த எருமை கூட்டத்தின் மீது மோதியது. இதில், நான்கு மாடுகள் உயிரிழந்தன. அப்போதும், ரயிலின் முகப்பு பகுதி சேதமடைந்து மாற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை டில்லியிலிருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த போது புலந்த்ஷாஹர் என்ற பகுதியில் ரயில் சக்கரங்கள் திடீரென பழுதானதால் பிரச்னை ஏற்பட்டது. ஏறத்தாழ 5 மணிநேரமாக ரயில் நகரவில்லை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement