விமானப்படையில் ஆயுத அமைப்புக் கிளை: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் (ஐஏஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும். இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.

இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “விமானப்படை அதிகாரிகளுக்காக ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு செயல்பாட்டுக் கிளை ஒன்று உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன், ரூ.3,400 கோடி வரை மிச்சப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.